Princiya Dixci / 2021 ஜனவரி 18 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராம மக்களுக்கு அரச கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டுமென, மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினருமான எம் .எம். மஹ்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்திலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைக்கையிலேயே, மேற்கண்டவாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
8 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் மாஞ்சோலை பிரதேசத்தில் 857 குடும்பங்களைச் சேர்ந்த 3,187 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர தேவைகளான பால்மா, மருத்துகள் போன்ற செலவுகளுக்கு எந்தவித வருமானமும் இன்றி அவதியுறுகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசால் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளான 5,000 ரூபாயையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த குடும்பங்களுக்கான 1,0000 ரூபாயையும் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கமும் அதிகாரிகளும் எடுக்கவேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
7 minute ago
20 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
57 minute ago