2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முதலைக் கடிக்கு உள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 24 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு  கலப்புப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்,  முதலைக் கடிக்கு உள்ளாகி, இன்று (24) காலை சடலமாக  மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம், புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன் (55 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடிச்சலாறு கலப்புப் பகுதிக்கு நேற்று பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற நபர் வீட்டுக்கு வரவில்லை என தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காணாமல் போன நபரின் உறவினர்கள், குறித்த கலப்புப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது,  முதலை கடித்த நிலையில் சடலம் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X