2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

மூதூரில் 11ஆம் நாள் போராட்டம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 11ஆம் நாள் கவனயீர்ப்பு போராட்டம், மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (11) இடம்பெற்றது.  

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் போராட்டத்தில் மூதூர்  பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், கிராமிய பெண்கள் குழுக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் இளைஞர்கள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.

‘வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்”, “நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை”, “கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை” மற்றும் “மதத்தை பின்பற்றுவது எங்கள் உரிமை” உள்ளிட்ட பல வாசகங்களை போராட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X