2025 மே 01, வியாழக்கிழமை

மூதூர் பொதுச் சந்தையில் இடநெருக்கடி

எப். முபாரக்   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூதூர் பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியைப் பொருத்தமான இடவசதிகள் கொண்ட மாடிக்கட்டட சந்தைத் தொகுதியாகப் புனரமைக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.

தற்போது இருக்கும் சந்தைக் கட்டடத் தொகுதியில், மீன், இறைச்சி, மரக்கறி விற்பனை, சில்லரைக் கடைத் தொகுதியெனப் பல்வேறு கடைத் தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில், இங்கு காணப்படும் சந்தைக் கட்டடத் தொகுதி போதுமானதாக இல்லையெனவும் இடவதிகள் கொண்டிராத நிலையிலும் தேவையான சுகாதார வசதிகளைக் கொண்டிராத நிலையிலும் பல கடைகள் மிக நெருக்கமான முறையிலும் காணப்படுகின்றன.

எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில்கொண்டு, வசதியான சந்தைக் கட்டடத் தொகுதிகளை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .