Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2019 நவம்பர் 01 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது பற்றி சிறுபான்மை சமூகம் சிந்திக்க முடியாது என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இதன்மூலம் வாக்குகள் வீணடிக்கப்படுவதுடன், எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம், நேற்று முன்தினம் (30) திருகோணமலை கிண்ணியாவில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல், அவதூறு குற்றச்சாட்டுகள், முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் என, நாலாபுறங்களிலும் பலவிதமான நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது என்றும் அவர் கூறினார்.
இத்தகைய இக்கட்டான சூழலுக்கு எமது சமூகத்தை ஆளாக்கிய தரப்பை வெற்றபெறச் செய்வதற்கா வாக்களிக்கப் போகின்றீர்கள் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .