2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மொறவெவ பிரதேசத்தில் அ.இ.ம.கா. களமிறங்குகிறது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜனவரி 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மொறவெவ பிரதேசத்தில் முதல் தடவையாக இம்முறை களமிறங்கியுள்ளதாகவும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுமாறும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரொட்டவெவவில் இன்று (08) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இக்கிராம மக்களால் பல குறைபாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க முடியாதெனவும் இத்தேர்தலின் போது பிரதிநிதியொருவரை நியமிக்குமாறும் அவர் கூறினார்.

அத்துடன், ரொட்டவெவ மஸ்ஐிதுல் ஹூதா ஐூம்ஆ பள்ளிவாசல் கட்டட நிதிக்காக ஆறு இலட்சம் ரூபாயும், பாடசாலை கதிரைகள் வாங்குவதற்கு இரண்டு இலட்சமும், மையவாடி அபிவிருத்திக்காக இரண்டு இலட்சம் ரூபாய் நிதியும் இன்றைய தினம் ஒதிக்கீடு செய்யப்பட்டன.

இதில் கிராம இளைஞர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X