தீஷான் அஹமட் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தை, மாடுகள் அசுத்தப்படுத்துவதால், விளையாட்டுப் பயிற்சி பெறுகின்ற மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, கல்லூரி சமூகத்தினர் விசனம் தெரிவிக்கின்றனர்.
விளையாட்டுப் பயிற்சியின் போதும், மாடுகள் மைதானத்தின் குறுக்காக நிற்பதாகவும் இதனால் மாணவர்களால் நேர்த்தியான முறையில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், சுட்டிக்காட்டுகின்றனர்.
இது விடயத்தில், மூதூர் பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டு, மாடுகளை, மைதானத்துக்குள் அனுப்பும் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி சமூகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
13 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago