2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் கடமையேற்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், தீீஷான் அஹமட், எப்.முபாரக்

திருகோணமலை - மொரவெவ பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட டபிள்யூ.ஆர்.ஜகத் குமார வேரகொட, இன்று (20)  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் தவிசாளர் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்ட நிலையிலே, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது, ஜகத் குமார வேரகொட புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .