Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஹஸ்பர்
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 99ம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை (15) இடம் பெற்றுள்ளது.
99ம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரதான வீதியின் வழியாக திருப்ப முயன்ற மோட்டார் சைக்கிளுடன் கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில் பிரதான வீதி ஊடாக கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
8 hours ago
8 hours ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
28 Apr 2026