Princiya Dixci / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆணையாளர் ஆர்.வளர்மதி தெரிவித்தார்.
தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்ச நிலைமை காரணமாக இன்று (26) முதல் வாகன அனுமதிப் பத்திரங்கள் ஒரு வாரங்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் “ஒன்லைன்” மூலமாக தமது வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இது அமுலில் இருக்கும் எனவும் பொதுமக்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago