2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாணவர் படுகொலைக்கு கிழக்கு மாகாண சபையில் கண்டனம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் அவசரப் பிரேரணையொன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ. ஜெனார்த்தனனால், இன்று வியாழக்கிழமை (27) சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்பின்னர், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது

கிழக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வு, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில்; காலை 10.00 மணியளவில் கூடியது.

இந்த அவசரப் பிரேரனைக்கு சகல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததுடன், இப்பிரேரணை தொடர்பில்,  எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் ஆகியோர் உரையாற்றி, தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறக் கூடாது எனவும் இந்தப் படுகொலைக்கு நீதியான விசாரனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரவித்தனர்.

மேலும், இக்கண்டனத் தீர்மானத்தை, ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதாகவும் தீர்மானிக்கப்ட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .