Princiya Dixci / 2017 மார்ச் 05 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மனநலம் குன்றிய யுவதியொருவரை வன்புணர்வுக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, கொட்பே பகுதியைச் சேர்ந்த 23, 20 மற்றும் 26 வயதுடைய சநதேகநபர்கள் மூவரை, இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல், இன்று (5) உத்தரவிட்டார்.
மனநலம் குன்றிய யுவதியைத் தவிர, வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வீட்டுக்குள் நுழைந்த குறித்த மூவரும், யுவதியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபர்களை சனிக்கிழமை, கைது செய்ததாக, சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கபட்ட யுவதி, திருகோணமலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025