Freelancer / 2024 ஜூன் 15 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் பள்ளிக்குடியிருப்பு - தங்கபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திருமகன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை (11) விறகு எடுப்பதற்காக சென்றபோதே குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026