2025 மே 07, புதன்கிழமை

யானைகளால் சேதம்

தீஷான் அஹமட்   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர், ஷாபிநகர் கிராமத்துக்குள், இன்று (28) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள், வீடொன்றையும் பலசரக்குக் கடையொன்றையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.

அத்தோடு, வீட்டிலிருந்த நெல்மூடைகளையும் உட்கொண்டு விட்டுச் சென்றுள்ளதாகவும், பயன்தரும் வாழை மரங்களையும் துவம்சம் செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கோருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X