தீஷான் அஹமட் / 2019 மார்ச் 27 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனை கிராமத்துக்குள் இன்று (27) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள், இரு வீடுகளை முற்றாகச் சேதமாக்கியுள்ளன.
இதன்போது, சிறு பிள்ளைகள், பெண்கள் உட்பட குறித்த வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள், அசம்பாவிதத்தை உணர்ந்து தப்பியோடியுள்ளமையால் உயிராபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
இதனைடுத்து வீடுகளில் காணப்பட்ட தளபாடங்கள், அலுமாரிகள், பாடசாலை உபகரணங்கள் ஆகியனவற்றைச் சேதப்படுத்தியுள்ள யானைகள், மின்சார இணைப்புகளையும் துண்டிச்துச் சென்றுள்ளன.
தமது கிராமத்தில் தொடர்ச்சியாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பாதிக்கப்பட்டோர், தமக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
11 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago