2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யானையின் தாக்குதலில் வீடு சேதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் பகுதியில் நேற்றிரவு (19) காட்டு யானையின் தாக்குதலில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதென, வீட்டு உரிமையாளர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்து பல கஷ்டங்களை எதிர்நோக்கி, மீண்டும் சந்தோஷமான வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் வேளை, யானையின் தாக்குதலில் வீடும் சேதமடைந்துள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் பல வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருந்த போதிலும் தன்னுடைய விடா முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட  இவ்வீடு உடைக்கப்பட்டதையடுத்து, தனக்கு வாழ்க்கையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் கவலையுடன் தெரிவித்தார்.

காட்டு யானையின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு, யானை மின் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியிலுள்ளவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X