எப். முபாரக் / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பகுதியில் 17 வயது இளம் யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்கேத்தின் பேரில் 27, 29 வயதுடைய குடும்பஸ்தர்கள் இருவரை, நாளை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (12) உத்தரவிட்டார்.
ஒரு சந்தேகநபருக்கு இரண்டு பிள்ளைகளும், மற்றொருவருக்கு ஒரு பிள்ளையும் உள்ளதாகவும் சந்தேகநபர்களின் மனைவிமாரின் தங்கையொருவரேயே, இவ்வாறு வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்களைத் திங்கட்கிழமை (11) கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
34 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
1 hours ago