2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ரூ.9 இலட்சம் மோசடி செய்தவருக்கு எட்டரை வருட சிறை

Thipaan   / 2016 ஜூன் 30 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

ஒன்பது இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ, எட்டரை வருட சிறைதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவருக்கே, நேற்றுப் புதன்கிழமை(29) இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்தநபர், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர், திருகோணமலை பிரதேசத்தில் வியாபாரம் மேற்கொள்வதற்காக, மற்றொருவரிடம் ஒன்பது இலட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கி, அதனைச் செலுத்தாதிருந்த நிலையிலே பணத்தினை கொடுத்த உரிமையாளரால் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .