Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 14 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எம் எஸ் அப்துல் ஹலீம்
கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயிலுடன், இன்று (13) மோதுண்ட வயோதிபர் மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தம்பலகாமம் தாயிப்நகர் பகுதியைச்சேர்ந்த அலியார் முகம்மட் சபூர் (64) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், ரயில் கடவையை கடப்பதற்கு முற்பட்ட போதே, ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
விபத்து சம்பவித்த நேரத்தில், அந்த கடவையின் காவலாளி கடமையில் இருக்கவில்லையென அறியமுடிகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago