2025 மே 07, புதன்கிழமை

ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2018 மார்ச் 07 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை, இலிங்க நகரிலுள்ள செவிப்புலனற்றோர், பேச முடியாதோருக்குரிய பாடசாலைக்கு, திருகோணமலை ரோட்டரிக் கழகத்தால் பாடசாலை இயக்குநர் திருமதி பாலசிங்கவிடம் கற்றல் உபகரணங்கள் மல்டி மீடியா ப்ரொஜெக்டர், டிவிடி பிளேயர் ஆகியன, நேற்று முன்தினம்   (05) ஒப்படைக்கப்பட்டன.

மிகக் குறுகிய காலத்தில் இந்தப் பயனுள்ள அன்பளிப்பை வழங்கிய திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் இதற்கு  அனுசரணை வழங்கிய இங்கிலாந்து பெத்தோவனுக்கும் ரோட்டரி கழக உறுப்பினர் ட்ரிம் வெஸ்ட்ப்ரூக்கும் பாடசாலை சார்பில் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்த அன்பளிப்பை வழங்கிய தன் மூலம் எதிர்காலத்தில் எளிதில் கற்றல் செயல் முறைகளை நடை முறைப்படுத்த முடியுமென அதிபர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கற்றல் சம்பந்தமான படங்கள், மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X