Thipaan / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் வியாழக்கிழமை (24) இலவச கண் பரிசோதனை நிகழ்வு, இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் பா.உதயசங்கர் தெரிவித்தார்.
மொரவௌ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை இப்பரிசோதை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
306 சி மாவட்ட திருகோணமலை லயன்ஸ் கழகத்தின் செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு தலைவர் ஜேம்ஸ் சமந்தர் தலைமையில் நியூ சில்வெர் ஸ்டார் விடுத்தியில் வியாழக்கிழமை (17) மாலை நடைபெற்றது.
இதில் லயன்ஸ் கழக முந்நாள் மாவட்ட ஆளுநர் பா.ஜனரஞ்சன், லீயோ கழக ஆலோசகர் க.திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
லயன் பா.உதயசங்கர் அங்கு மேலும் கூறுகையில்,
எமது கழகம் மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ளவர்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றது. கடந்த மாதம் முகச் சீரமைப்பு சிகிச்சை பொது வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டது.
72 பேர் பரிசோதிக்கப்பட்டு 34 பேருக்கு உறுப்பு மாற்று சீரமைப்பு செய்யப்பட்டது. சேருவில பிரதேசத்தில் உள்ள சிறுவன் உருவருக்கு காது ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக 7 மணிநேர அறுவை சிகிற்றை செய்யப்பட்டது.
தனக்கு காது வந்திருப்பதை அறிந்த சிறுவன் இன்று பொது வைத்தியசாலைக்கு வந்து தனது நன்றியினைத்தெரவித்து சென்றுள்ளான்.
இத்திட்டத்துக்காக எமது கழகம் 4 இலட்சம் ரூபாயை செலவிட்டுள்ளது. 4 அறுவைசிகிச்சை நிபுனர்களும் 32 மருத்துவ ஊழியர்களும் இத்திட்டத்தில் செயலாற்றினர்.
அத்துடன் மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் பகுதியில் விபுலானந்தா வித்தியாலயத்தில் 5 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சதுரங்கம் விளையாட்டு பயிற்சி முகாமும் வலைபந்து பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

5 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
39 minute ago
44 minute ago