2025 மே 14, புதன்கிழமை

லொறி விபத்தில் இருவர் பலி

Editorial   / 2017 ஜூன் 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

திருகோணமலை, சூரியபுர பகுதியில் நேற்று (16) மாலை இடம்பெற்ற லொறி விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளனரென, சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த ஆதம்லெப்பை முகம்மது மன்சூர் (51 வயது) என்பவர் பலியாகியுள்ளார் எனவும் லொறியில் பயணித்து உயிரிழந்த மற்றைய நபரின் பெயர் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லையெனவும் கந்தளாய்  வைத்தியசாலையின் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், வெறுகல் - பூநகர் பிரதான வீதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் ஜெயக்குமார் (40 வயது) என்பவரும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளாரெனவும் அவர், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லை பகுதியிலிருந்து தோப்பூருக்கு விற்பனைக்காக மரக்குற்றிகளை ஏற்றி வந்த லொறியின் டயருக்கு காற்றுப் போனமையினால், லொறி குடை சாய்ந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக சூரியபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .