Niroshini / 2016 மார்ச் 02 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, குச்சவெளியில் காணித் தகராறு ஒன்றின் போது வீட்டொன்றை எறித்து சேதப்படுத்திய கணவன், மனைவி ஆகிய இருவரை இம்மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா செவ்வாய்கிழமை (01) உத்தரவிட்டார்.
குச்சவெளி, ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 37வயதுடைய கணவரும் 36வயதுடைய மனைவியுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளி பிரதேசத்தில் காணிச் சண்டையொன்றின்போது கடந்த 25ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பக்கத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வீட்டொன்றை பெற்றோல் ஊற்றி எறித்த குற்றச்சாட்டின் பேரில் கணவனையும் மனைவியையும் குச்சவெளி பொலிஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago