2025 மே 15, வியாழக்கிழமை

விடுதி அசுத்தமாக காணப்படுவதாக நோயார்கள் விசனம்

Princiya Dixci   / 2017 மே 13 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்களின் விடுதிகள் மற்றும் மலசல கூடங்கள் அசுத்தமாகக் காணப்படுவதினால் துர்நாற்றம் வீசுவதாக, நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பல பிரதேசங்களிலிருந்தும் சிகிச்சைக்காக நோயாளர்கள் வருகை தருவதாகவும் வைத்தியசாலை விடுதிகள், சுற்றுச் சூழல்கள் அசுத்தமாகக் காணப்படுவதினால், துர்நாற்றம் வீசுவதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையைச் சுத்தப்படுத்துவதற்காக ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளிகள் தேவைப்படுகின்ற போதிலும் 35 பேர் மாத்திரமே கடமையாற்றி வருவதாகத் தெரியவருகின்றது.

தற்போது   சுத்திகரிப்பு சேவையில் அரசியல்வாதியொருவரின் கம்பனியொன்று ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டு வருவதாகத்  தெரியவருகின்றது.

மத்திய அரசாங்கக் கண்காணிப்பில் காணப்பட்டும் இந்த வைத்தியசாலையில் நிலை தொடர்பில், அதிகாரிகள் ஏன் அக்கறை கொள்கிறார்கள் இல்லையென, நோயாளர்களும் புத்திஜீவிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

நோயாளர்களின் நலன் குறித்து சுத்திகரிப்பாளர்களை அதிகரித்து துர்நாற்றமில்லாத வைத்தியசாலையாக மாற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .