Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
மலைகளில் கல் உடைப்பதற்காக பயன்படுத்தும் வெடிபொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூதூர், ஆலிம்சேனைப் பிரதேசத்தில் 29 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை (19) கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து அவ்வெடிபொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் இச்சந்தேக நபர்;, வாடகைக்கு வசிக்கும் வீட்டில் இந்த வெடிபொருட்களை மறைத்துவைத்துள்ளார். இது தொடர்பில் இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் இவரை நாளை திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கல் உடைப்பதற்கான வெடிபொருட்களை பொலிஸாரின் அனுமதியைப் பெற்று கடைகளில் கொள்வனவு செய்யவேண்டும். அவ்வாறு உடைத்த பின்னர் எஞ்சிய வெடிபொருட்களை பொலிஸாரின் அனுமதியுடன் அக்கடையில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இச்சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வெடிபொருட்களை மறைத்து வைத்துள்ளார். இதன் அடிப்படையிலேயே இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
34 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
50 minute ago