Suganthini Ratnam / 2017 ஜனவரி 22 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
மூன்று வருட காலத்தைக் கொண்ட சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிநெறி எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தில்; ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜெ.பிரதீபன் தெரிவித்தார்.
இலவசமாகக் கற்பிக்கப்படும் இப்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் க.பொ.த. உயர்தரத்தில் சித்தி அடைந்திருப்பதுடன், க.பொ.த சாதாரணதரத்தில் ஆங்கிலப் பாடத்தில்; சித்தி அடைந்திருக்க வேண்டும்.
தற்போது இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், இப்பயிற்சிநெறியைத் தொடர விரும்புவோர் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்னராக தங்களின் விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவகத்திலோ அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.trincoati.com என்ற முகவரியிலோ பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பப்படிவங்களை உயர் தொழில்நுட்பவியல், கன்னியா வீதி, திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025