2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியர் மீது தாக்குதல்

Thipaan   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, பதவிசிறிபுர பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, மதுபோதையில் வந்த நபரொருவரின்; தாக்குதலுக்குள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில், நேற்றுச் சனிக்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான வைத்தியர்  சாம்பசிவம் முரளிதரன் (44 வயது) எனவும் பதவிசிறிபுர பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவர் எனவும் தெரியவருகிறது.

குறித்த வைத்தியர் விடுதியில் தங்கியிருந்த போது, நேற்று (01) மாலை 4.20 மணியளவில் மது போதையில் வந்த நபரொருவரினால் தாக்கப்பட்டதாக, பதவிசிறிபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்பட்டவர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதவிசிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X