Thipaan / 2016 ஜூலை 01 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
புல்மோட்டை- குச்சவெளி கடற்பரப்பில் சட்ட விதிமுறைகளை மீறி, சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தமை மற்றும் டைனமைட் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில், மீனவர்கள் 10 பேரைக் கைதுசெய்த திருகோணமலை கடற்படையினர், அவர்களைத் தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (30) இரவு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், 2 படகுகளும் 700 கிலோகிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago