2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

விதிமுறைகளை மீறிய மீனவர்கள் அறுவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை  குச்சவெளி கடற்பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி 07 கிலோமீற்றருக்கு அப்பால் சென்று மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 06 மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர், அவர்களைத் தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி  பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், கடற்படையினர் தங்களைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஆறு பேருக்கும் பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது, அவர்கள், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .