2025 ஜூலை 26, சனிக்கிழமை

விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Thipaan   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலையில், அரச சட்ட விதிமுறைகளை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 10 வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள், திருகோணமலை நகர் பகுதிகளிலுள்ள பேக்கரிகள், பலசரக்குக் கடைகள், அலைபேசி கடைகள் போன்ற  வர்த்தக நிலையங்களை, நேற்று (25) சோதனைக்குட்படுத்தினர்.

இந்த 10 வர்த்தகர்களும் காலவதியான பொருட்களை வர்த்தக நிலையத்தில் வைத்திருந்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மேலதிக விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X