2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வீதியை மறித்து கவனயீர்ப்புப் போராட்டம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாழைமடு, செம்பிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள், கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால், இன்று திங்கட்கிழமை (03) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தடை செய்யப்பட்ட விவசாய உரமானியங்களை வழங்குவதுடன், விண்ணப்பித்த விவசாயிகள் 873 பேருக்கு உரமானியத்தை வழங்குமாறும், காணிக்கச்சேரி நடத்தி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கல், தரிசு நிலமாக இருக்கும் காணிகளை விவசாயம் செய்ய அனுமதிக்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்புப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கிண்ணியா பிரதேச செயலாளர் முன்னிலையில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தங்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X