Princiya Dixci / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, அபேயபுர சந்தியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி வித்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று திங்கட்கிழமை (22) மாலை 03 மணியளவில் இடம்பெற்றதாகவும் திருகோணமலை ஆண்டாங்குளத்தினைச் சேர்ந்த கசுன் திலக்க வயது (32) என்ற இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சமிக்கைகள் இடப்படாமலும் வாகனத்தின் வேகமுமே விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்த திருகோணமலைப் பொலிஸார், வானின் சாரதியைக் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026