2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கும் சிறுவனுக்கும் பிணை

Thipaan   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய ரிப்பர் வாகனச் சாரதியையும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 14 வயதுச் சிறுவனையும் தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு, செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்ட மூதூர் நீதவான் ஐ.என்.றிஸ்வான், அவர்களை எதிர்வரும் மாதம் மாதம் 1 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

கடந்த 23 ஆம் திகதி, ரிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்த 15 வயதான இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே மரணமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 14 வயது சிறுவன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.

இவர்களை, மூதூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியதையடுத்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X