Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட டிப்பர் வாகனச் சாரதியை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கங்கைப் பாலத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (31) டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூதூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி (வயது 40) பலியானார்.
முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில்; இருந்து பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, டிப்பர் வாகனச் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025