Niroshini / 2016 மே 31 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர்-பாலநகர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூதூர்-கட்டைபரிச்சான் பகுதியைச் சேர்ந்த முத்துராசா ஜெகதீஸ்வரன் (வயது 34) மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மட்டக்களப்பு-ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த சதக்குலெப்பை மகரூப் (வயது 45) ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
1 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
21 Mar 2026