Princiya Dixci / 2016 ஜூன் 16 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்;கு அருகில், முச்சக்கர வண்டியொன்றை, பின்னால் சென்ற லொறி மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) மாலை இடம்பெற்ற விபத்தில், முச்சக்கரவண்டிச் சாரதியான, திருகோணமலை, உவர்மலை மத்திய வீதியைச் சேர்ந்த எம்.மரியதாஸ் (66 வயது) மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கிளிவெட்டி, இலிங்கபுரத்தைச் சேர்ந்த எஸ்.மங்களேஸ்வரி (48 வயது) ஆகியோரே காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026