Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பனாக்குளம் பகுதியில் பட்டா ரக லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோமரங்கடவெல பகுதியிலிருந்து வேகமாக வந்த பட்டா ரக வாகனம் வளைவில் மோட்டார் சைக்கிளில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (04) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், ரொட்டவௌ- அத்தாபெந்திவௌ பகுதியைச் சேர்ந்த முதலிஹாமிகே குணரத்ன (42 வயது) மற்றும் கோமரங்கடவெல-மடுகஹவௌ பகுதியைச்சேர்ந்த சமன்த ராஜபக்ஷ (41 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டா வாகனத்தின் சாரதியான திருகோணமலை, அபேபுர -லெனின் மாவத்தையைச்சேர்ந்த மரக்கல மானகே ஜகத் குனசிறி (34வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
47 minute ago
2 hours ago