Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 10 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும் டிமோ பட்டா லொறியும் நேற்று வியாழக்கிழமை (09) இரவு 07 மணியளவில் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதியும் பயணியும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை -கபுக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான எம்.தம்மிக சன்ஜீவ (34 வயது) மற்றும் கெப்பித்திக்கொள்ளாவ - துடுவெவப் பகுதியைச் சேர்ந்த கே.எம்.ரத்ணசிறி பண்டா (33 வயது) ஆகியோரே இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பசுமாடு ஒன்றும் உயிரிழந்துள்ளது.
ஹொரவ்பொத்தானைப் பகுதியிலிருந்து மொறவெவ நோக்கி வேகமாக வந்த டிமோ பட்டா லொறி, மயிலகுடாவப் பகுதியில் பசுமாடு ஒன்றுடன் மோதி, முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடனும் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிமோ பட்டா லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பசுமாட்டின் உரிமையாளர் மாட்டின் பெறுமதியைப் பெற்றுத்தருமாறு பொலிஸ் நிலையத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விபத்து தொடர்பாக மொறவெவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago