Niroshini / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை, மட்டிக்களி பகுதியில் புதன்கிழமை (24) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை -கண்டி வீதி -இலக்கம் 19 -மட்டிக்களி பகுதியைச் சேர்ந்த ஜோன் தெனடிக் (வயது 40 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டிக்களி பகுதியில் ஹோட்டலொன்றில் கடமையாற்றி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீது, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் மோதியுள்ளனர்.
இதில் படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026