2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கல்கடவெலப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (11) காலை அனுமதிக்கப்ட்டுள்ளதாக, வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கோமரங்கடவெல - கல்கடவெல பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.சின்தக (34 வயது) மற்றும் எம்.சுஜித் ஆனந்த (41 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற வேளையில் வீதியிலிருந்த குழியொன்றுக்கு வெட்டிச்செல்ல முற்பட்ட போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி அவ்விடத்தில் மயங்கிய நிலையில் கோமரங்கடவெல கிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிக்சென்றவரின் தலையில் ஏற்பட்ட காயத்தினால் இரத்தம் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் வைத்தியசாலையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பில் கோமரங்கடவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X