2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Thipaan   / 2016 ஜூன் 27 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை 05ஆம் கட்டைப்பகுதியில், இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, வாகனமொன்று மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் வாகனத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.டி.பிரேமரத்ன (48வயது) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .