2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: 9 பேர் காயம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், தீசான் அஹமட்

திருகோணமலை, கிண்ணியாப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டலடியூற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலிருந்து திருகோணமலை நகர் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த வடி ரக வானும் ஆலங்கேணிப் பகுதியிலிருந்து கண்டல்காட்டுப் பகுதிக்குச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இவ்விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சந்திரலிங்கன் யுகன் (வயது 29) என்பவரே பலியானார்.

கண்டல்காட்டுப் பகுதியிலுள்ள மாட்டுப் பட்டியிலிருந்து பால் எடுத்து வருவதற்காக சென்றபோதே இவர்  விபத்துக்கு உள்ளாகிப் பலியாகினார்.  வானில் சென்றோரே காயமடைந்துள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X