2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் சாரதி காயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை -புத்தளம் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை லொறியொன்று வீதியை விட்டு  விலகி விபத்துக்குள்ளானதில், காயமடைந்த லொறியின் சாரதி  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி, புளுகஹதென்னை பகுதியைச் சேர்ந்த எஸ்.சமரதுங்க (வயது 38) என்பவரே காயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து புத்தளம் சென்று மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே, இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .