2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் தாயும் மகளும்;படுகாயம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 09 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

பாம்மதவாச்சிப் பகுதியில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும்; மொறவெவப் பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி ஹொரவப்பொத்தானை பிரதான வீதி வழியாக  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, வீதியால் மயில் ஒன்று குறுக்காக வந்தமையால், அம்மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் காணப்படும் மைல் கல்லுடன் மோதி விபத்துக்கு உள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.  

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X