2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் தாயும் மகளும் பலி;ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, எஸ்.சசிக்குமார்

திருகோணமலை பிரதான வீதியில் திங்கட்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகளும் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சாம்பல்தீவு ஆறாம்; வட்டாரத்தைச் சேர்ந்த வாசுகி (வயது 59) அவரது மகளான சிவதாரணி (வயது 33) ஆகியோரே இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, அதே இடத்தைச் சேர்ந்த ஜே.அருள்ராஜ் (வயது 31), கே.ராஜேஸ்வரி (வயது 70) ஆகியோர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியுடன் திருகோணமலை 22ஆவது இராணுவப் படையணிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனம் மோதி இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இடம்பெற்ற இடத்துக்குச் சென்று  விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு திருகோணமலை 22ஆவது இராணுவப் படையணிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனமே முச்சக்கரவண்டியை மோதிவிட்டுச் தப்பிச்சென்றமை தெரியவந்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த வாகனத்தின் சாரதியான 29 வயதுடைய இராணுவ வீரரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .