2026 மார்ச் 23, திங்கட்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை -புத்தளம் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை வேகமாக பயணித்த கார் ஒன்று மதகுடன் மோதியபோது, அக்காரில் பயணித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹொரவ்பொத்தானையைச் சேர்ந்த திலகசிறி பண்டார (வயது 41) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இவர், இரண்டு மணிக்கு கடமைக்குச் செல்ல வேண்டியுள்ளதால் வேகமாக வந்தமையே விபத்துக்கு கரணம் எனவும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .