Niroshini / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில், டிமோ பட்டா லொரியின் முன் கதவால் விழுந்து படுகாயமடைந்த பெண், திருகோணமலை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (24) உயிரிழந்துள்ளார்.
கோமரங்கடவெல, குருஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான நண்டாவத்தி புஸ்பா (வயது 43 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி இரவு 9.30மணியளவில் கணவருடன் டிமோ பட்டா லொறியில் சாரதிக்கு அருகிலுள்ள இருக்கையில் இருந்து சென்றுள்ளதாகவும் கதவு மூடப்படாமல் சென்றதால் தவறுதலாக விழுந்ததாகவும் சாரதியான கணவர் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, லொறியை செலுத்திச் சென்ற கணவனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026