2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரால்குழி பாலத்தருகில் மாட்டு வண்டிலும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநபர், புதன்கிழமை (05) காலை உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை(03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்குள்ளாகி, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த சா{ஹல் ஹமீது அனீஸ் என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X