2025 மே 22, வியாழக்கிழமை

விபத்தில் 750 முட்டைகளும் சேதம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.அப்துல் ஹலீம்

திருகோணமலை, சூரங்கல் சந்தியில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானபோது, அம்மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 750 முட்டைகளும் அவ்விடத்திலேயே உடைந்து சேதமாகியுள்ளன.

வியாபாரி ஒருவர் கிண்ணியாவிலுள்ள கடை ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகளை சூரங்கல் பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கொண்டு சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தின்போது சிறு காயங்களுக்குள்ளான அவ்வியாபாரி கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .