2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் வயோதிபப் பெண் பலி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப்பெண், செவ்வாய்க்கிழமை (23) உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொரு விபத்தில் படுகாயமடைந்த இளைஞனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை, சிங்ஹகிரிமுல்லை பன்சல வீதியைச் சேர்ந்த ஈ.ஜே.குணவதி (52 வயது) என்ற வயோதிபப்பெண்ணே உயிரிழந்துள்ளார் என தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நடந்து சென்று கொண்டிருந்த குறித்த வயோதிபப் பெண்ணுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர், படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி 06ஆம் கட்டை பகுதியில் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சைக்கிளில் பயணித்த அதே இடத்தைச்சேர்ந்த சக்திவேல் சசிதரன் (17 வயது) படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (23) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டிச் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் வானும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் மருத்துவமாது, உயிரிழந்துள்ளதுடன் வானின் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வானின் சாரதியான திருகோணமலை-அன்புவெளிபுரம் பகுதியைச் சேர்ந்த காளிதாஷன் டிலக்ஷன் (24 வயது) என்பவரே கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X